புதர்களில் பதுங்கியிருந்த 24 காதலர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிசார்!

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையை அடுத்து  களுத்துறை கடற்கரை புதர்கள், பாறைகள், கடற்கரை புதர் மரங்களின் உள்ளே இருந்து பல காதல் ஜோடிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை கடற்கரை மற்றும் கடற்கரை மரங்களின் உள்ளே இருந்த 24 காதலர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கைக்குப் பின்னர் ஜோடிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

திடீர் சுற்றிவளைப்பு

களுத்துறை பிரதேசத்தில் இடம்பெறும் பல்வேறு துஷ்பிரயோகங்களை தடுக்கும் நோக்கில் மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுகங்கைக்கு அண்மித்த கடற்கரையில் உள்ள பாறைகளுக்கு இடையில் மற்றும் மரப் புதர்களுக்கு இடையில் இருந்து கைதான ஜோடிகள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

மேலும் இவ்வாறு ப்தர்களில் தங்கியிருப்பது பல்வேறு குற்றங்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும் என கடும் எச்சரிக்கையுடன் இளைஞர், யுவதிகளை பொலிஸார் விடுவித்ததாகவும் கூறப்படுகின்றது.