யாழில் மாணவியிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் நயப்புடைப்பு!

  யாழ்.வசாவிளான் பகுதியில் வீதியால் சென்ற பாடசாலை மாணவியிடம் சேஷ்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் பிரதேசவாசிகளால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றநிலையில் சம்பவம் தொடர்பில் பலாலிப் பொலிஸார் மற்றும் இராணுவப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவ சிப்பாய் சேஷ்டை

தனிமையில் சென்ற பாடசாலை மாணவியை பின்தொடர்ந்து சென்ற இராணுவ சிப்பாய் சேஷ்டையில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் பதட்டமடைந்த மாணவி அபயகுரல் எழுப்பிய நிலையில் அங்கு கூடிய பொதுமக்கள் இராணுவ சிப்பாயை நையப்புடைத்து பொலிஸில் ஒப்படைத்தனர்.

அதேவேளை தமிழ் இராணுவ சிப்பாயான குறித்த நபர் கடந்த காலத்திலும் இவ்வாறான சில்மிஷங்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleஇலங்கையில் மூன்று நாட்களில் கடவுச் சீட்டுகளை வழங்கும் முறை விரைவில்!
Next articleஅனுமதி பெற்ற நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் பூட்டு