யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இடம்பெற்ற விசேட அபிஷேக பூசைகள்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இன்று (13.06.2023) சகஸ்ரசங்காபிஷேக விசேட அபிஷேக பூசைகள் நடைபெற்றன.

கும்பாபிஷேக தினமாகிய  இன்று ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே வீற்றுள்ள வேல்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் இடம்பெற்றது.