தென்னிலங்கையில் சாதித்த யாழ் பல்கலை மாணவர்கள்; பலரும் வாழ்த்து!

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மலைத்தென்றல் 2023 நிகழ்வை முன்னிட்டு பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்விக்கூட மாணவர்களிடையே நடாத்தப்பட்ட மாபெரும் விவாதப் போட்டியில் யாழ் பல்கலைகழக மாணவர்கள் வெற்றியீட்டியுள்ளனர்.

கருத்தாடல் 2023 ல் பதினைந்து பல்கலைகக்கழகங்கள் மற்றும் கல்விக்கூடங்களில் இருந்தும் பங்குபற்றிய 24அணிகளுடன் சொற்போர் புரிந்து அவர்கள் வெற்றியை தமதாக்கியுள்ளனர்.

சொற்போரின் இறுதி சுற்று வரை முன்னேறி இரண்டாம் நிலையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் அணியினர் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

நிகழ்வில் மோ.ஹரிஹரன்(தொழிநுட்ப பீடம்), ம.மோகனதாரணி(கலாசார சுற்றுலாத்துறை கலைப்பீடம்) , தயா ராகவன் (விஞ்ஞான பீடம்) , சி.திஷான்(கலாசார சுற்றுலாத்துறை கலைப்பீடம்) , சு.அஜித்குமார்(தொழிநுட்ப பீடம்) ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.