யாழில் தொடர் பாலியல் தொல்லையால் விபரீத முடிவெடுத்த 12 வயது சிறுமி!

யாழில் தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய 12 வயதான சிறுமி ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் சிறுமி ஊரவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருகையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 12 வயது சிறுமி ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டாரால் காப்பாற்றப்பட்டு, சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

21 வயது இளைஞனால்  பாலியல் தொல்லை

வைத்தியசாலையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு , சிறுமி உடல்நலம் தேறிய பின்னர் , சிறுமிக்கு உளவள சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன்போது, தனக்கு 21 வயதுடைய இளைஞன் ஒருவர் தொலைபேசி குறுந்தகவல்கள் ஊடாக ஆபாச குருஞ்செய்திகளை அனுப்புவதாகவும், தவறான தொடுகைகள் மூலம் பாலியல் தொந்தரவு தந்ததலும் , தான் கடும் விரக்தியடைந்ததால் உயிர் மாய்க்க முயன்றதாக தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து சம்பம் தொடர்பில் வைத்தியசாலை ஊடாக ஊர்காவற்துறை பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Previous articleசுங்க அதிகாரி போல் நடித்து பண மோசடி!
Next articleஅம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தாலி திருட்டு பூசகர் கைது!