தொற்று நோய் குறித்து எச்சரிக்கை விடுப்பு!

Meningococcal – Meningitis பற்றீரியா குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் இவ்வாறான பல நோயாளிகள் பதிவாகுவதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் நிபுணர் சமித்த கினிகே தெரிவித்தார்.

காலி சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்று திடீரென சுகவீனமடைந்த நிலையில், அவர்கள் Meningococcal – Meningitis நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் இந்நோய் பரவுவது தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்  என வைத்திய நிபுணர் சமித்த கினிகே சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட சிலர் பதிவாகின்றனர். இது கண்டறியப்படாத நோயல்ல. இது தொற்று மூலம் பரவும் நோயாகும். இதனால் சமூகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை. முதலில் அடையாளம் காணப்பட்ட இரண்டு நோயாளிகள் மட்டுமே இதுவரை பதிவாகியுள்ளனர். இந்த வகையான நோய் தொற்றாளர்கள் மூலம் பரவக்கூடியது” என்றார்.