சந்திரயான் 3 வெற்றிக்கு வாழ்த்துக் கூறிய ஜனாதிபதி

சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியதற்கான வாழ்த்துக்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் மூலம் இந்தியாவின் தனித்துவமான சாதனை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பிற்கும் (இஸ்ரோ) இந்திய மக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைக்காக இலங்கை பெருமிதம் கொள்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மனித சமூகத்திற்காக இந்திய பிரதமர் மோடி ஆற்றிய இந்த அர்ப்பணிப்பு, எதிர்கால சந்ததியினரை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அடைய ஊக்குவிக்கும் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Previous articleதொற்று நோய் குறித்து எச்சரிக்கை விடுப்பு!
Next articleமட்டக்களப்பு வாகன விபத்தில் ஆசிரியர் பலி