8 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

களுத்துறை மேல் நீதிமன்றம் 8 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினம் ஒன்றில், கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவரைக் கொன்ற சம்பவம் தொடர்பில் 8 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை வழங்கி களுத்துறை மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன குறித்த மரண தண்டனையை விதித்துள்ளார்.

இவ்வாறு கொல்லப்பட்ட நபர் களுத்துறை தெற்கு கலில் பிளேஸ் பகுதியைச் சேர்ந்தவர்.

குறித்த 8 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் களுத்துறை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

சுமார் 20 வருடங்கள் நீடித்த நீண்ட விசாரணையின் பின்னர் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து, களுத்துறை நீதிமன்றத்திற்கு முன்பாக பெருமளவான மக்கள் திரண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்