சீனிக்கான புதிய விலை நிர்ணயம்!

நாட்டில் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பொதி செய்யப்பட்ட 1 கிலோ வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட 1 கிலோ சீனிக்கு 295 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொதி செய்யப்பட்ட 1 கிலோ சிவப்பு சீனியின் அதிகபட்ச சில்லரை விலை 330 ரூபாவாகும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனியின் அதிகபட்ச சில்லரை விலை 350 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலைகள் பட்டியல் இன்றையதினம் (03-11-2023) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.