நான் ஒரு துரோகியா?முத்தையா முரளிதரன்

இலங்கையின் பிரச்சனையை தமிழக அரசு சரியாக புரிந்து கொள்ள தவறிவிட்டது என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலேயே முத்தையா முரளிதரன் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் போர் நடைபெற்ற போது, ​​சில அரசியல்வாதிகள் பிரச்சினையை சரியாக புரிந்து கொள்ளாது என்னை துரோகி என்றும் கூறினார்கள் என முத்தையா முரளிதரன் அங்கு கருத்து தெரிவிக்கையில் கூறிப்பிட்டார்.

முரளியின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக உருவாக்கப்பட்ட ‘A Legendary 800 – Against All Odds’ என்ற திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தப்படுகிறது.