சிவனொளிபாத மலை  யாத்திரை தொடர்பில் விசேட வர்த்தமானி

இன்று ஆரம்பமான சிவனொளிபாத மலை  யாத்திரை பருவ காலத்தில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயற்பாடுகள் தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தல் 10 முக்கிய விடயங்களைக் கொண்டுள்ளது.

2023-2024 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாத மலை  யாத்திரை பருவகாலம் இன்றறைய (26) பூரணை தினத்தில் ஆரம்பமானது.

வர்த்தமானி அறிவித்தலின்படி, சிவனொளிபாத மலை  யாத்திரை பருவகாலம்  இன்று முதல் அடுத்த வருடம் மே மாதம் 24 ஆம் திகதி வரை உள்ளது.

இதனிடையே, சிவனொளிபாத மலையை தரிசனம் செய்வதற்காக இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

சிவனொளிபாத மலை  யாத்திரை பருவ காலத்தில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயற்பாடுகள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல்