மின்சார சபை மறுசீரமைப்பு மக்களுக்கு நன்மையை கொடுக்க வேண்டும்!

மின்சாரசபை மறுசீரமைக்கப்பட வேண்டுமானால் அந்த சீரமைப்பானது பொதுமக்களுக்கு நன்மையளிக்க வேண்டும் மாறாக அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் நன்மையளிப்பதாக இருக்ககூடாது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று (04) செய்தியில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தயாராகுவதாகவும் அதற்கான காரணம் இலங்கையை மின்சார சபையில் இருக்கும் சில பிரிவுகளை ஆறாகப் பிரித்து தனியார் மையப்படுத்தல் கம்பெனிகளாக பதிவு செய்து தனியார்மயமாக்கல் செய்யப்பட போவதாக ஒரு விடயத்தினை முன்வைத்து தாங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக அவ்வாறான சட்டங்கள் பாராளுமன்றத்தில் வந்தால் தாங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஈடுபட போவதாக செய்தியை பார்க்கக் கூடியதாக இருந்தது.

உண்மையில் இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இரண்டும் உண்மையில் மறு சீரமைக்கப்பட வேண்டிய இரண்டு விடயங்கள் அதாவது இந்த இரண்டு அமைப்புகளும் தங்களுடைய வருமானத்தை செலவுகளை பார்த்து மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் மக்கள் மீது இலங்கையிலே வரி கட்டுகின்ற சாதாரண மக்கள் மீது அந்த சுமையை போடாமல் ஏதாவது ஒரு மாற்று நடவடிக்கையில் ஈடுபடுவது உண்மையிலே ஆராயப்பட வேண்டிய விடயம்.

ஆனால் இன்று இலங்கை மின்சார சபையில் இருக்கின்ற இந்த ஊழியர்கள் வீதியில் வந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கான பிரதான காரணம் இந்த மின்சார சபை மற்றும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அவற்றிற்கு பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர் காஞ்சன விஜயசேகர அவர்களுடைய வெளிப்படை தன்மை இல்லாத செயல்பாடுகள் கடந்த காலத்திலே ஊழல் மோசடிகள் நடக்கலாம், நடந்திருக்கலாம் என்று சந்தேகம் அந்த ஊழியர்களுக்கு இருப்பதன் காரணத்தினால் தான் இன்று இந்த ஆர்ப்பாட்டங்கள் அல்லது பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊடாக மக்களுக்கும் ஒரு அசைவுகளையும் வரக்கூடிய வகையான செயல்பாடுகள் நடக்கக்கூடிய சூழல் அமைந்திருக்கின்றது என தெரிவித்தார்.