ரொறன்ரோவில் வீடு வாங்க காத்திருக்கும் வெளிநாட்டவருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

கனடாவின் ரொறன்ரோவில் வீடு கொள்வனவு செய்வதற்காக காத்திருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு பிரஜைகள் வீடு கொள்வனவு செய்யும் போது வரி அறவீடு செய்யும் யோசனைக்கு நகர நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

ரொறன்ரோ மாநகரசபையின் மேயர், ஒலிவியா சொ இந்த யோசனையை முன்வைத்தார்.

இந்த முன்மொழிவினை நகர நிர்வாக நிறைவேற்றுக்குழு அங்கீகரித்துள்ளது.

வதிவிட நோக்கில் ரொறன்ரோவில் வீடுகளை கொள்வனவு செய்யும வெளிநாட்டுப் பிரஜைகளிடமிருந்து வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

வெளிநாட்டுப் பிரஜைகள் தாம் கொள்வவு செய்யும் சொத்து மதிப்பின் பத்து வீதம் வரியாக செலுத்த நேரிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 2025ம் ஆண்டு முதல் இந்த வரி அறவீட்டு நடைமுறை அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரொறன்ரோவில் இந்த வாரம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.