தன்னை விட 28 வயது குறைந்த பெண்ணை மணம் முடித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!

66 வயது முன்னாள் கிரிக்கெட் வீரர் தன்னை விட 28 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

முன்னாள் வீரர்

இந்திய அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளிலும் 13 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியவர் முன்னாள் வீரர் அருண் லால் (66). இவருக்கு ஏற்கனவே ரீனா என்பவருடன் திருமணமாக விவாகரத்து செய்தார்.

இதற்கிடையில் புல்புல் சாஹா (38) என்ற பெண்ணுடன் அருண் லாலுக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் முதலில் பார்ட்டி ஒன்றில் இருவருக்கும் பொதுவான நண்பர்களால் சந்தித்துள்ளனர்.

இரண்டாவது திருமணம்

பின்னர் பல்வேறு சந்திப்புகளின் மூலமாக இருவரது காதலும் வளர்ந்துள்ளது. இந்த நிகழ்வு அந்த நேரத்தில் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும், இவர்களின் திருமண புகைப்படங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் கிரிக்கெட் வீரர்களான வினோத் காம்ப்ளி, ஜவஹல் ஸ்ரீநாத், முகமது அசாருதீன், யோகராஜ் சிங், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.