இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படும் சாந்தனின் உடல்!

சாந்தனின் புகழுடல் சற்றுமுன்னர் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள சனசமூக நிலையத்தில்  பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கமிலக்கணாவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் இருந்து ஏடுத்துச் செல்லப்பட்டு தேவன் குறிச்சி அறிவகம் சன சமூக நிலையத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது.

இறுதிக் கிரியைகள் முடித்து கண்ணீர் கதறலுடன் சாந்தனின் உடல் வீட்டிலிருந்து எடுத்து செல்லப்பட்டதை தொடந்து பொது இடங்களில் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டு எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


சாந்தனின் பூதவுடல் இன்றையதினம்(4) அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் தற்போது சமய கிரியைகள் ஆரம்பமாகியுள்ளது.

சமய கிரியைகளில் வேலன் சுவாமிகள் உட்பட பல சைவ குருமார்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இறுதிக் கிரியைகள் நிறைவுப் பெற்றதும் பூதவுடல் உடுப்பிட்டி சனசமூக நிலையத்திற்கு எடுத்துக் செல்லப்பட்டு அங்கு நினைவேந்தல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சாந்தனின் பூதவுடல் வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இறுதிகிரியைகளில் பொதுமக்களும் குடும்பத்தினரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.