சினோபெக் எரிபொருள் விலைகளிலும் ஏற்ப்படவுள்ள மாற்றம்!

சினோபெக் நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை மாற்றியமைத்துள்ளது.

இதன்படி, சினோபெக் நிறுவனம், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 09 ரூபாவினால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலை 447 ரூபாவாகும்.

அத்துடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 458 ரூபாவாகும்.

இதேவேளை, 92 ஒக்டேன் லீற்றர் பெற்றோல் மற்றும் ஒடோ டீசலின் விலையில் நிறுவனம் எவ்வித மாற்றமும் செய்யவில்லை.

சினோபெக் 92 ரக பெற்றோல் லீற்றர் 368 ஆகவும், சினோபெக் ஒட்டோ டீசல் லீற்றர் 360 ரூபாவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.