நாட்டு மக்களின் சனத்தொகையில் வீழ்ச்சி!

இலங்கையின் சனத்தொகை 2023 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், தெரிவித்துள்ளது.

புலம்பெயர்தல், பிறப்பு வீதங்கள் குறைதல்
இது புலம்பெயர்தல், பிறப்பு வீதங்கள் குறைதல் மற்றும் அதிகரித்த இறப்பு வீதங்கள் உள்ளிட்ட காரணிகளின் வெளிப்பாடாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

அதேவேளை இலங்கையில் கடந்த 2022 இல், மக்கள் தொகை 2,181,000 ஆக இருந்தது. 2023ல் இது 2,037,000 ஆகக் குறைந்துள்ளது. அதோடு புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 2022 இல் 361,800 இல் இருந்து 2023 இல் 268,920 ஆகக் குறைந்துள்ளதுடன் வருடாந்த இறப்பு விகிதம் உயர்ந்துள்ளது.

2014 இல் 125,334 வீதமாகவிருந்த இறப்பு வீதம் 2023 இல் 196,000 ஆக உயர்ந்துள்ளது . 2022 இல் 85,572 ஆக இருந்த நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை 2023 இல் 222,715 ஆக உயர்ந்தது.

இதன் காரணமாக இலங்கை சனத்தொகை வீழ்ச்சியில் இடம்பெயர்வு ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது