இரண்டு ஓய்வூதியம் பெறும் முன்னாள் ஜனாதிபதி!

   தான் இரண்டு ஓய்வூதியங்களை பெறுவதாக மிகிந்தலை விகாராதிபதி தெரிவித்த குற்றசாட்டினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நிராகரித்துள்ளார்.

மிகிந்தல ரஜமஹா விகாரையின் தலைமை மதகுரு வலஹதம்மரட்ண தேரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளையே சந்திரிகா குமாரதுங்க நிராகரித்துள்ளார்.

 ஓய்வுதிய அதிகரிப்பு வழங்கப்படவில்லை

அதோடு முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை மாத்திரம் நான் பெறுகின்றேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேசமயம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தனது பதவிக்காலத்தில் முன்னாள் ஜனாதிபதிகளிற்கான ஓய்வூதியத்தை 97000 ஆக அதிகரித்தார் எனினும், எனக்கும் முன்னாள் ஜனாதிபதி டிபி விஜயதுங்கவிற்கும் இந்த ஓய்வுதிய அதிகரிப்பு வழங்கப்படவில்லை எனவும் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும இது சரிசெய்யப்பட்டதாகவும், தனது வங்கிகணக்கிற்கு அனுப்பப்படும் ஓய்வூதியம் சமூக சேவைகளிற்காக பயன்படுத்தப்படுவதாகவும் சந்திரிகா குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.