கார்த்தியை கைது செய்த பொலிசார்!

நடிகர் கார்த்தி

தமிழ் சினிமாவில் நடிகராக தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்துள்ளார் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜப்பான் எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை.

அடுத்ததாக 96 இயக்குனர் பிரேம் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் நலன் குமாரசாமி இயக்கத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர், நடிகைகள் பேட்டிகளில் கலந்துகொள்ளும் போது, தங்களது வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவத்தை பகிர்ந்துகொள்வார்கள். அதை கேட்கும் போது, இவரா இப்படி பண்ணியது என நமக்கே அதிர்ச்சியாக இருக்கும்.

போலீஸ் கைது

அப்படி நடிகர் கார்த்தி, தனது நண்பர்களுடன் சேர்ந்த செய்த ஒரு விஷயத்திற்காக போலீஸ் கைது செய்து நீதிமன்றம் வரை அழைத்து செல்லப்பட்டுள்ளார். அது எங்கு, எப்போது நடந்தது என்று தெரியுமா..

படிப்பிற்காக US சென்றிருந்த கார்த்தி , தனது நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். சில நண்பர்கள் ஒரு காரிலும், மற்ற சில நண்பர்கள் வேறொரு காரிலும் சென்றுள்ளனர். அப்போது கார்த்திக்கு முன் சென்றிருந்த அவருடைய நண்பனின் கார் வேகமாக சென்றுள்ளது.

US-ல் நடிகர் கார்த்திக்கு வழி தெரியாத காரணத்தினால் தனது நண்பன் காரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். முன் சென்ற கார் அதிவேகமாக செல்ல, பின் வந்த கார்த்தியின் காரும் அதிவேகத்தில் சென்றுள்ளது.

டிராஃபிக் விதிமுறைகளை மீறி காரை ஒட்டியதற்காக கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரையும் அந்நாட்டு போலீஸ் கைது செய்துள்ளது. பின் நீதிமன்றம் அழைத்து வந்து $250 டாலர் அபராதம் கட்டவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

US சென்ற புதிதில் தனக்கு இப்படியொரு சம்பவம் நடந்தது என்று, பேட்டி ஒன்றில் ஓபனாக பகிர்ந்துகொண்டார் கார்த்தி.