முக்கிய நபரின் மரணத்தால் உடைந்து போன விஜய்!

தளபதி விஜய்

விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ என்பதை நாம் அறிவோம். இவர் விரைவில் சினிமாவில் இருந்து விலகி முழு நேரமாக அரசியலில் களமிறங்க போகிறார்.

தளபதி 69 படம் தான் விஜய்யின் கடைசி திரைப்படம் என கூறப்படுகிறது. இப்படியொரு நிலையில், விஜய்யின் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகவும் திருப்பம் குறித்து ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய்யை உலுக்கிய மரணம்

நடிகர் விஜய் தனது வாழ்க்கையில் என்றும் மறக்காத ஒருவர் என்றால் அது அவருடைய தங்கை வித்யாவை தான். இவர் சிறு வயதிலேயே உடல்நல குறைவால் மரணமடைந்துவிட்டார். வித்யாவின் மரணம் விஜய்யின் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக உலுக்கியது.

நடிகர் விஜய் தனது சிறு வயதில் மிகவும் சுட்டி தனமாக தான் இருந்துள்ளார். ஆனால், அவருடைய தங்கை வித்யாவின் மரணத்திற்கு பின் தான் அமைதியான மையாக மாறிவிட்டாராம். இதை விஜய்யின் தாய் ஷோபா பேட்டி ஒன்றில் கூறியுள்ளாராம்.