ஒன்லைன் ரயில் சேவையில் சிக்கல்!

தொலைதூர ரயில்களில் இருக்கை முன்பதிவு செய்ய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒன்லைன் முறை சிக்கலை ஏற்படுத்துவதாக ரயில் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் பலர் நேற்று அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

பொது பயணிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கான டிக்கெட் முன்பதிவு செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையாக இலங்கை ரயில் திணைக்களம் அண்மையில்  ஒன்லைன் டிக்கெட் மற்றும் ஒன்லைன் ரயில் இருக்கை முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியது.

அதன்படி, ஒன்லைன் ஊடாக இருக்கை முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் வழங்கப்பட்டாலும், ரயில் நிலையத்திற்கு வந்த பின், சில பயணிகளுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.