இலங்கை பணவீக்கத்தில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

    இலங்கையில் 2024 ஜனவரியில் 6.5% ஆகப் பதிவாகியிருந்த பணவீக்கம் 2024 பெப்ரவரி மாதத்தில் 5.1% ஆகக் குறைந்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண்ணுக்கு அமைய இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 2024 இல் 4.1% ஆக இருந்த உணவு பணவீக்கம் பெப்ரவரி 2024 இல் 5.0% ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 2024 ஜனவரியில் 8.5% ஆக இருந்த உணவு அல்லாத பணவீக்கம், பெப்ரவரி 2024 இல் 5.1% ஆகக் குறைந்துள்ளது.