ஜந்து மணித்தியாலங்களை கடந்து மைதிரியிடம் தொடரும் விசாரணைகள்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் 05 மணித்தியாலங்கள் கடந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு காலை 10.30 மணிக்கு வருகை தந்த மைத்திரிபால சிறிசேனவிடம் இன்னும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முதலாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளார்.

குறித்த விசாரணை இன்றையதினம் (25.03.2024) காலை 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னால் உள்ள பிரதான சூத்திரதாரிகளை தனக்கு தெரியும் என கடந்த சில தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார்.

சிஐடி விசாரணைக்கு

இதனையடுத்து, அவர் மீது உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய, இன்றையதினம் மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதனால், அப்பகுதியில் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் குவிந்துள்ளதோடு பொலிஸாரினால் பலத்த பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.