டொலர் வீழ்ச்சிக்கான காரணம் வெளியானது!

நாட்டின் பொருளாதாரம் சுருங்கி வருவதால் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி 325 ரூபாவாக இருந்த டொலர், மார்ச் 22 ஆம் திகதி 303 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

டொலர் வீழ்ச்சியடைவதற்கான காரணம்

இவ்வாறு டொலர் வீழ்ச்சியடைவதற்கு பதிலளித்த அரசாங்கம், பொருளாதாரம் வலுவடைவதால் டொலர் வீழ்ச்சியடைகின்றதாக  கூறி உண்மையை மறைக்கின்றது.

பொருளாதாரத்தின் படி, டொலரின் மதிப்பு வீழ்ச்சிக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.முதல் காரணம், ஏற்றுமதி வருமானம், சுற்றுலா வருமானம் மற்றும் வெளிநாட்டுப் பணவரவு அதிகரிப்பு ஆகும்.

இரண்டாவது காரணம் இறக்குமதி குறைவதால் டொலருக்கான தேவை குறைகின்றது என்றும் விளக்கமளித்துள்ளார்.