கடற்றொழிலாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த இன்று (22.5.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சில நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம்

அத்துடன், தற்போது பணிபுரியும் பல நாள் மீன்பிடி படகுகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஊடாக செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக அதிகரித்து வருகின்றதன் காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் தொடர்ந்தும் என அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.