புயலுக்கு தயாராக இருங்க.. தனுஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்

நடிகர் தனுஷ் அடுத்து ராயன் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். தனுஷே இயக்குவதால் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜெ.சூர்யா உள்ளிட்ட பலரும் முக்கிய ரோல்களில் நடித்து இருக்கின்றனர்.

புயலுக்காக காத்திருங்க

இந்நிலையில் தனுஷ் ராயன் பற்றி ஒரு முக்கிய அப்டேட் கொடுத்து இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது ராயன் படத்தின் பின்னணி இசையை முடித்து கொடுத்துவிட்டார் என போட்டோ வெளியிட்டு இருக்கிறார்.

புயலுக்காக காத்திருங்கள் என போட்டோவை வெளியிட்டு தனுஷ் அறிவித்து இருக்கிறார்.