பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மலையாள சென்சேஷன் நடிகை! 

பிரதீப் ரங்கநாதன் கோமாளி என்ற படத்தை இயக்கி பிரபலம் ஆனவர். அதன் பின் லவ் டுடே படத்தை இயக்கி நடித்து இருந்தார். அந்த படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். மேலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்திலும் நடிக்கிறார்.

சென்சேஷன் ஹீரோயின்
இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் ஒரு புது படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

அந்த படத்தில் பிரேமலு புகழ் நடிகை மமிதா பைஜூ நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

சுதா கொங்கராவுக்கு அசிஸ்டன்ட் ஆக இருந்த கீர்த்தீஸ்வரன் இந்த படத்தை இயக்க போகிறாராம். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.