யாழில் காணி பிடிக்க வந்தவர்களை விரட்டியடித்த பொது மக்கள்!

 யாழ்ப்ப்பாணம்- சுழிபுரம் காட்டுபுலத்தில் கடற்படை முகாமிற்காக முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் உள்ள 4 பரப்பு தனியார் காணியினை நில அளவைத் திணைக்களம் கடற்படையினரின் காணி சுவீகரிப்பிற்காக காட்டுப்புலத்திற்கு வருகை தந்தனர்.

இந்நிலையில் காணி அளிவீடு செய்ய வந்த அதிகாரிகள் மக்கள் எதிர்ப்பால் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.