கணவர் வெளிநாட்டில் பிள்ளைகளை தவிக்க விட்டு காதலனுடன் சென்ற தாய்!

கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் இளம் பெண் ஒருவர் தனது 2 பிள்ளைகளையும் தவிக்கவிட்டு, காதலனுடன் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும்தெரியவருகையில்,

மத்திய கிழக்கு நாட்டில் கணவன்

தனது 7 வயது மகளையும் 2 வயது ஆண் குழந்தையையும் பாதுகாப்பின்றி வீட்டில் விட்டுவிட்டு காதலனுடன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிள்லைகளை விட்டுச்சென்ற பெண்ணை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த பெண்ணின் கணவர் 5 மாதங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கு நாட்டிற்கு வேலைக்குச் சென்று் நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் பெண் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் 2 பிள்ளைகள் அழுதுகொண்டிருப்பதைக் கண்ட அயல் வீட்டு பெண்ணின் உறவினர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

பெண்ணின் 2 பிள்ளைகளும் பட்டினியால் வாடி வந்ததாக கூறப்படுவதுடன் தாயாருடன் தொடர்பு வைத்திருந்த நபரும் அயலவர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் பிள்ளைகளை தம்பொறுப்பில் எடுத்த பொலிஸார் தலைமறைவான ஜோடிகளை தேடி வருகின்றனர்.