உலக பணக்கார பட்டியலில் இந்திய பெண்!

அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் உலகின் டாப் 10 பெண் பணக்காரர்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றது.

இந்தப் பட்டியலில் தொடர்ந்து 4-வது ஆண்டாக உலகின் பணக்கார பெண்மணி என்ற பட்டத்தை பிரான்சுவா பெட்டன்கோர்ட் மேயர்ஸ் பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு 98.2 பில்லியன் டொலராகும்.

இந்த பட்டியலில் 5-வது இடத்தில் இந்தியாவின் பணக்காரப் பெண்மணியான சாவித்ரி ஜிண்டால் உள்ளார்.

இவரின் சொத்து மதிப்பு 38 பில்லியன் டொலர் ஆகும்.

ஜிண்டால் குழுமம் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் வருவாய் 15 பில்லியன் டொலரைத் தாண்டியுள்ளது.