வெள்ளத்தில் அடித்துச் சென்ற வாகனங்கள்!

நாட்டில் சீரற்ற காலநிலை நிவவி வரும் நிலையில் வௌ்ளநீரில் சிக்குண்ட கப் ரக வாகனத்தை அங்கிருந்த இளைஞர்கள் இணைந்து​ பெரும் முயற்சிக்குப் பின்னர் மீட்டெடுத்துள்ளனர்.

பெலும்மஹர சந்தியில், கொடகெத பாலத்துக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கப் ரக வாகனம்
கப் ரக வாகனம், வெள்ளத்தில் சிக்குண்டு அள்ளிச்சென்றபோது, பெரும் போராட்டத்துக்கு மத்தியில் இளைஞர்கள் அதனை தடுத்து நிறுத்தினர்.

பெலும்மஹர சந்தியில் பல அடிக்கு மேல் வெள்ளநீர் நிரம்பியிருந்தது. இந்நிலையில் சிக்குண்ட கப் ரக வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை மீறி, இழுத்துச் செல்லப்பட்டது.

இதன் போதே, அங்கிருந்த இளைஞர்கள் ஒன்றுக்கூடி, கப் வாகனத்தை மீட்டதுடன், சாரதியை​யும் காப்பாற்றியுள்ளனர்.