யாழில் சோகம் ஆறுவயது சிறுவன் பரிதாப மரணம்!

யாழில் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ள முயன்ற 6 வயது சிறுவன், கிணற்றினுள் தவறி விழுந்து பரிதபமாக உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் சனிக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.

சிறுவனின் பெற்றோர் பணி நிமித்தம் வெளியே சென்றவேளை, சிறுவன் கிணற்றில் தண்ணீர் அள்ள முயன்றுள்ளான்.

அப்போது கிணற்றில் “கப்பி” பொருத்தப்பட்டிருந்த கயிறு அறுந்ததால், சிறுவன் கிணற்றினுள் தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளில் சாவகச்சேரி பொலிஸார் ஈடுபட்டு வரும் நிலையில் சிறுவனின் உயிர்ழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.