லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலைகள் இதோ!

இன்று (04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 150 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 3,790 ரூபாவாகும்.

5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,525 ரூபாவாகும்.

2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 712 ரூபா ஆக விற்பனை செய்யவுள்ளதாகவும் லிட்ரோ காஸ் நிறுவனம் கூறியுள்ளது.