அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் தந்தையும் மகளும் பலி!

கம்ஹாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

எடேரமுல்ல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் பாரிய விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரயில் கடவையில் மோட்டார் வண்டியொன்று ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில்வே திணைக்களம்
காரில் பயணித்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக பிரதான பாதையில் இயங்கும் ரயில் தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.