ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது தனிப்பட்ட வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படாது என்றும் மாறாக நாட்டின் வெற்றி, தோல்வியே தீர்மானிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை வோடர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற பொருளாதார மறுசீரமைப்புக்கான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் பங்கேற்கும் இளைஞர், யுவதிகளுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியும் என்ற திருப்தி மக்களுக்கு இருக்குமாயின் அந்த வேலைத்திட்டத்துடன் முன்னேறிச் செல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார்.