லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம்

லிட்ரோ (litro gas) சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை (02) காலை வெளியாகும் என லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை திருத்தம்
இந்தநிலையில், புதிய விலைகள் நாளைய தினம் அறிவிக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் (muditha peiris) தெரிவித்துள்ளார்.

மேலும், மாதாந்த எரிவாயு விலை சூத்திரத்துக்கு அமைய இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.