தகாத உறவால் பறிபோன உயிர்!

   பியகம, மல்வான பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள்லதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலைச் சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

நவந்தகல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கொலையைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய நபர் ஒருவர் கொஸ்கொட பொலிஸ் அதிகாரிகளால் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தங்கியிருந்த வாடகை வீடொன்றினுள் அவரது கள்ளக்காதலி கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட மற்றும் பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.