மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சம்பந்தனின் பூதவுடல்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் (R.Sampanthan) பூதவுடல் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாளை புதன்கிழமை (03) நாடாளுமன்றத்தில் 2 மணிக்கு சம்பந்தனின் பூதவுடல் அஞ்சலிக்காக  வைக்கப்பட்ட உள்ளது.

நாளை நாடாளுமன்றில் அஞ்சலி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயக்கர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மரியாதை செலுத்தவுள்ளனர்.

மேலும் மாலை 4 மணிவரையில் சம்பந்தரது பூதவுடல் நாடாளுமன்றில் வைப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா. சம்பந்தர் நேற்று முன் தினம் (30) உடல்நல குறைவால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.