விவசாயிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி!

விவசாயிகளுக்கான 2024 ஆம் ஆண்டிற்கான புதிய பருவத்தில் உர மானியத் தொகை குறித்து அறிவித்தல் ஒன்று வெளியாகி உள்ளது.

இதுவரை உர மானியத் தொகை பெறாவிட்டால் அது குறித்து வட்டார வேளாண்மை சேவை மையம் அல்லது மாவட்டக் கல்லூரியில் விரைவில் விசாரிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த தகவலை ஹம்பாந்தோட்டை (Hambantota) விவசாயிகள் பொது சேவைகள் உதவி ஆணையாளர் புது சந்தருவன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

உர மானிய பணத்தை திருடிய குழு

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஹம்பாந்தோட்டை (Hambantota) மாவட்டத்தில் உர மானிய பணத்தை திருடிய குழுவொன்று அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புது சந்தருவன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2024 ஆம் ஆண்டு புதிய பருவத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியப் பணம் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாயிகள் குழுவொன்று பொய்யான தகவல்களைச் சமர்ப்பித்து உர மானிய பணத்தை மோசடியாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதையடுத்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய சேவைகள் உதவி ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.