வேலைநிறுத்தம் தொடர்பில் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி!

இன்றைய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபடவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

ஆனால், நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் நாளைய தினம் (09) ஆசிரியர் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை சுகவீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் பொதுசெயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin)குறிப்பிட்டுள்ளார்..

பாடசாலை நடவடிக்கை 

இதேவேளை, இன்று மற்றும் நாளை பாடசாலைகள் வழமை போல் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று நாடு முழுவதும் இருநூறுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.