கட்டுப்பாடுகளுடன் பதிவுத் திருமணங்களை நடத்துவதற்கு அனுமதி

இலங்கையில் பதிவுத் திருமணங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமணங்களை வீட்டிலோ அல்லது திருமண மண்டபத்திலோ நடத்துவதற்கு மறு அறிவித்தல் வரையில் தடை விதித்து நேற்று அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்த நிலையிலேயே தனிமைப்படுத்தல் உத்தரவுகள் குறித்து விளக்கமளித்த பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பதிவுத் திருமணத்தை நடத்துவதாயின், சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, மணமகன் மற்றும் மணமகள் ஆகியோருடன், அவர்களின் பெற்றோர்களும், பதிவாளரும், சாட்சியாளர்கள் இருவரும் பங்கேற்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தவிர்த்து வேறு எவருக்கும் இதன்போது பங்கேற்க அனுமதி வழங்கப்படமாட்டாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.