யாழ் காங்கேசன்துறையில் விரைவில் தொடங்கும் படகுச் சேவை!

காங்கேசன் துறைமுகம் மற்றும் காரைக்கால் துறைமுகம் இடையே படகு சேவை திட்டமிட்டபடி ஏப்ரல் 29ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indsri Ferry Service Pvt Ltd இன் தலைவர் நிரஞ்சன் நந்தகோபன் சண்டே ரிம்ஸிடம், முனைய கட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இலங்கை கடற்படை தற்போது சுங்க மற்றும் குடிவரவு கட்டிடங்கள், பயணிகள் புறப்பாடு மற்றும் வருகை பகுதிகளை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

முதற்கட்டமாக, வாரத்தில் ஆறு நாட்களுக்கு ஒரு பயணத்திற்கு 120 பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல படகுகள் அனுமதிக்கப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் படகு சேவை இயக்கப்படாது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, படகு பயணத்திற்கு 04 மணித்தியாலங்கள் தேவைப்படும் எனவும், பயணி ஒருவர் 100 கிலோ பொதியை எடுத்துச் செல்ல முடியும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.