இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளரான இளைஞன் அவுஸ்திரேலியாவில் பரிதாப மரணம்!

இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளரான இளைஞன் அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். இலங்கை காலியைச் சேர்ந்த 30 வயதுடைய குஷான் நிரோஷனா என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
இவர் விக்டோரியா மாநிலம் Ballarat பகுதியில் பொறியியலாளராக பணிபுரிந்துவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் Ballarat-இலிருந்து Colac-க்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்து சம்பவித்திருப்பதாகவும், இவரது கார் பிரதான வீதியிலிருந்து விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதிய நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு அவசர சேவைப்பிரிவினர் வரவழைக்கப்பட்டபோதும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுவதற்கு முன்பே இவர் மரணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் மொரட்டுவ பல்கலைக்கழகம் Civil Engineering Department-இன் Batch 12′-ஐச் சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகிறது.

Previous articleசுவிட்சர்லாந்துக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை
Next articleபெல்ஜியத்தில் இறந்த பெண்ணின் உடலில் இரு வேறு வைரஸ் திரிபுகள்!