எரிவாயு வெடிப்புக்கான காரணம் வெளியானது!

எரிவாயு கொள்கலன்களில் மேற்கொள்ளப்பட்ட கலவை மாற்றமே கடந்த காலங்களில் இலங்கையின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கான காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு வெடிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கையளிக்குமாறு ஜனாதிபதி நியமித்த நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் ஷாந்த வல்பாலகே இதனை தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புக்களும் எரிவாயு கொள்கலன்களும் வெடித்துச் சிதறியிருந்தன.

இதுதொடர்பில் எதிர் கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தன. அதுமாத்திரமன்றி பாவனையாளர்களை குண்டு வைத்துக் கொள்வதற்கு இணையானது இது என்றும் விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாட்டில் எரிவாயு கொள்வனவு செய்வதில் மக்கள் தயக்கம் காட்டியதுடன் விறகு மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புக்களுக்கு மாறவும் முயற்சித்திருந்தனர்.

இதற்கிடையில் ஜனாதிபதி விசேட நிபுணர் குழுவை அமைந்திருந்த நிலையிலேயே இது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.