கோட்டாபயவுக்கு சீன ஜனாதிபதி அனுப்பிய செய்தி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு (Gotabaya Rajapaksa) சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், (Xi Jinping) புத்தாண்டு வாழ்த்தொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த வாழ்த்து செய்தியை இன்று (27-12-2021) சீன தூதுவர்குய் சென் ஹாங் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.

மேலும், இலகு பணப்பரிமாற்றத்தின் மூலம் சீன மத்திய வங்கியிடமிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் இந்த வாரம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.