பரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு வீடு!

டோக்கியோவில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் 2020 ஈட்டி எறிதலில் புதிய உலக சாதனையைப் படைத்து இலங்கைக்காக தங்கப் பதக்கத்தை வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கான புதிய வீட்டை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கி வைத்தார். அத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலையீட்டில் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு பரிசுச் சான்றிதழை பிரதமர் கையளித்ததாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 2 கொம்பனி வீதிப் பகுதியிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீடு ஒன்றே இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

Previous articleதனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து நாட்டுக்கு முக்கியமா? ஆவேசமான பிரபல நடிகை!
Next articleவெளிநாட்டு மாப்பிள்ளைக்காக காதலனை கழட்டிவிட்ட தமிழ் பெண்!