பாரிஸில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் : பொலிஸார் தீவிர விசாரணை

பாரிஸில் படுகொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாரிஸின் ஒன்பதாவது பிராந்தியத்தில் உள்ள boulevard de Clichy இல் இன்று காலை இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்கிருந்த மதுபான விடுதி ஒன்றின் அருகில் சிலரிற்கிடையில் வாக்குவாதமும் கைகலப்பும் நடந்துகொண்டிருந்தவேளை அங்கு சிற்றுந்தில் ஒருவர் இவர்களைச் சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.

அந்தச் சமயத்தில் கைகலப்பில் இருந்த ஒருவர் தொலைந்து போ என அநதச் சிற்றுந்தில் வந்தவரை அவமானப்படுத்தி உள்ளார். உடனடியாக அந்தச் சிற்றுந்தில் வந்தவர் உடனடியாக .45 ரக கைத்துப்பாக்கியினால் அவமானப் படுத்தியவரின் தலையில் சுட்டுவிட்டுத் தப்பியுள்ளார்.

அங்கு வந்த குற்றத் தடுப்புப் பிரிவினர் உடனடியாக ஒரு படையணியைக் களத்தில் இறக்கி கொலையாளியை பரிஸ் 18 இல் வைத்துக் கைது செய்துள்ளனர். இவர் ஏற்கனவே பல குற்றங்களில் ஈடுபட்டவர் என போலீசார் தெரிவித்தனர்.

Previous articleகனடாவில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர் தொடர்பில் : பொலிசார் வெளியிட்ட முக்கிய தகவல்
Next articleநியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி!