யாழில் மர்மமான முறையில் இறந்த இரு பெண்களின் சடலங்கள் மீட்பு!

யாழில் மர்மமான முறையில் இறந்த இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள யாழ்.மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 76 மற்றும் 73 வயதுடைய வயோதிப பெண்கள் என பொலிஸாரின் விசாரணையில்
தெரியவந்துள்ளது.

இருவர்களில் ஒருவர் ஒரு நாளிலும் மற்றொருவர் ஒரு நாளிலும் உயிரிழந்திருக்களாம் என நம்பப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் குறித்த வீட்டில் இருவர் மட்டுமே வசித்து வந்த நிலையில், அவர்களுக்கு உதவிக்கு யாரும் இல்லை என தெரியவந்துள்ளது.

கிராம அலுவலகர் முக்கிய வேலைக்காக அவர்களின் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Previous articleயாழில் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்த 05 வயது சிறுமி
Next articleகாணமால் போன சிறுமி சடலமாக மீட்பு