காணமால் போன சிறுமி சடலமாக மீட்பு

நேற்றையதினம் காணாமல் போன 09 வயதுடைய சிறுமி இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது பண்டாரகம – அட்டலுகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமியின் சடலம் அமத்தி வைக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சேற்றுப்பகுதியில் இருந்துமீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அட்டலுகம, பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயதான சிறுமி பாத்திமா ஆயிஷா.

நேற்றைய தினம் கோழிக்கடைக்குச் சென்று திரும்பும் வழியில் காணாமல் போயுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சிறுமி காணமல் போனாதாக செய்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் தீவிர தேடுதல் மேற்கொண்டனர்.

இதனையடுத்து, தற்போது சிறுமி அவரது வீட்டில் இருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Previous articleயாழில் மர்மமான முறையில் இறந்த இரு பெண்களின் சடலங்கள் மீட்பு!
Next articleயாழ்.பல்கலைக்கழகத்தில் பதவி உயர்த்தப்பட்ட இணைப்பேராசிரியர்