யாழில் பதுக்கி வைத்த பெட்ரோல் தீப்பற்றியதில் ஆசிரியை ஒருவர் பலி !

யாழில் பதுக்கி வைத்திருந்த பெட்ரோல் எதிர்ப்பாராதவிதமாக தீப்பற்றியதில் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் தனது தாயார் வீட்டில் தங்கியிருந்த ஓய்வுபெற்ற 41 வயதான பிரபாகரன் பிறேமலதா என்ற ஆசிரியை என தெரியவந்துள்ளது.

Previous articleகண்டியில் மாயமான 14 வயது சிறுமி : பொதுமக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!
Next articleகாதலி ஏமாற்றியதால் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்!